தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி!
தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.;
மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணையை தமிழக சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
முன்னதாக ஓராண்டுக்கு ஒப்பந்தகாலம் முடிவடையும் முன்பே தங்களை பணிநீக்கம் செய்ததாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 29 பேரும் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து இந்த பிரச்சினை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் சுகாதார துறை அவர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கி உத்திரவிட்டுள்ளது.