வரி ஆலோசகர்களுக்கு தனி நல வாரியம் -ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் வேண்டுகோள்

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைய அரசுக்கு வேண்டுகோள்.

Update: 2021-09-26 03:44 GMT

தமிழக ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமாவனர்கள், ஜி.எஸ்.டி போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் சங்க தலைவர் முகம்மது அஸ்கர் கூறியதாவது: ஜிஎஸ்டி போர்ட்டலில், ரிட்டர்ன் தாக்கல் செய்ய மாதம்தோறும், 11ம் தேதி கடைசி நாள். அன்று மாலை, 5 மணி முதல் அந்த போர்ட்டல் செயல்படுவதில்லை. அன்று நள்ளிரவு, 12 மணிக்கு மேல் ரிட்டன் தாக்கல் செய்தால், ஒரு நாளைக்கு, ரூ.200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், செலுத்த வேண்டிய வரிக்கும், வட்டி செலுத்த வேண்டும்.

மின்னணு முறையில் மாதம்தோறும் ரிட்டன் தாக்கல் செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுப்பதுடன், ஆண்டு ரிட்டனை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் பாலமாக இருந்து, வரி வருவாயை ஈட்டி தரும், வரி ஆலோசகர் நலனுக்கென, தமிழக அரசு, தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News