சென்னை விமானநிலையத்தில் தங்கப்பசை பறிமுதல்: சுங்கத்துறையினா் நடவடிக்கை

சென்னை விமானநிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புடைய 930 கிராம் தங்கப்பசையை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-18 01:10 GMT

சென்னை விமானநிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புடைய 930 கிராம் தங்கப்பசையை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சிறப்பு பயணிகள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.42 லட்சம் மதிப்புடைய 930 கிராம் தங்கப்பசையை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து, திருவள்ளூரை சோ்ந்த கடத்தல் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நீலகண்டன்(31) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவா் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவருடைய உடைமைகளை முழுமையாக சோதனையிட்டனர். ஆனால் உடமைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கலைந்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை கண்டுபிடித்தனர். அதைத் திறந்து பார்த்தபோது பாலிதீன் கவருக்குள் 930 கிராம் தங்கப்பசை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.42 லட்சம்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணி பாலாஜி நீலகண்டனை கைது செய்தனர். அதோடு அவர் கடத்தி வந்த ரூ.42 லட்சம் மதிப்புடைய 930 கிராம் தங்க பசையையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags:    

Similar News