வேளாண் இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம், அமைச்சர் தலைமையில் நடந்தது
சென்னையில் வேளாண் இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.;
சென்னை சேப்பாக்கத்தில் வேளாண்மை துறை இயக்குனர் அலுவலகத்தில் அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுடன் ஆய்வுக் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண்மை கூடுதல் இயக்குனர் ( பணி மேலாண்மை) அருணா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.