அறிவாலயத்தில் கூடிய கூட்டம்: தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.;
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருவதால் உற்சாகமடைந்த தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் திரண்டதால் அவர்களை தடுத்து நிறுத்தாத காரணத்தால் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.