தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை.
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரளாவிலிருந்து பேருந்து, ரயில் மூலமாக தமிழகம் வரும் மக்களை பரிசோதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் இதுவரை 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.