சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.;

Update: 2021-07-16 06:52 GMT

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில் காவிரி பிரச்சனையில் நாம் ஏற்கெனவே இழந்தது தவிர,கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதன் வாயிலாக, கபினி கிருஷ்ணராஜசாகருக்கு தண்ணீர் வராமல், அதனால், தழகத்தில் விளை நிலங்களை எல்லாம் தரிசு நிலங்களாக மாறும் பேராபத்து இருக்கிறது.

இதனால் தமிழகத்தை பாதுகாக்க, தமிழக எதிர்காலத்தை பாதுகாக்க, 7.5 கோடி தமிழர்களின், ஒட்டு மொத்த குரலாக, அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் எடுத்துக் கூறவும், தமிழகத்தின் குரல் என்பதை பதிவு செய்வதற்காக சந்திக்க இருக்கிறோம்.

மேகதாது பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசு, தொடர்ந்து வஞ்சகம் செய்து வருகிறது. புதிய கல்வித் திட்டம், நீட் தேர்வு பிரச்னை, மேகதாது அணை பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்திற்கு, மத்திய அரசு தொடர்ந்து நயவஞ்சகம், துரோகம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News