மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி: வாலிபர் தீக்குளித்து தற்கொலை
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் வீட்டு முன், வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை சூளைமேடு, கில்நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பழனிகுமார், (வயது 57) ரியல் எஸ்டேட் வேலை செய்பவர். இவர், பாலகிருஷ்ணன், 30, என்பவருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
வேலை வாங்கி தராத நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பாலகிருஷ்ணனுக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால், வங்க்கணக்கில் பணமின்றி திரும்பியுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த பாலகிருஷ்ணன், தான் கையில் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் தீக்குளித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இது தொடர்பாக பழனிகுமாரிடம் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.