தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம்: தயாநிதி மாறன் எம்பி!

தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தயாநிதிமாறன் எம்பி குற்ற;

Update: 2021-06-01 15:40 GMT

அமைச்ச்ர சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது.

சென்னை பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  தயாநிதி மாறன் ஆகியோர், துறைமுகம் தொகுதி என்.எஸ்.சி போஸ், டி.என்.எஸ்.சி சாலை நாராயணப்பா சாலை , தேவராஜ முதலி தெரு , நயணிப்ப நாயக்க தெரு, மெமொரி ஹால் பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி  1கிலோ, கோதுமை 1கிலோ, சமையல் எண்ணெய் 1கிலோ, சேமியா 2 பாக்கெட், ரவை 1கிலோ, குழம்பு மசாலா ஒரு பாக்கெட், துவரம் பருப்பு 1கிலோ, சர்க்கரை 1கிலோ மற்றும் டீ த்தூள் ஆகிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் , 200 ரூபாய் உதவித்தொகையும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆண்டு நாங்கள் ஆட்சியில் இல்லாத போதே உதவினோம். தற்போது ஆட்சியில் இருக்கிறோம் நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருப்போம். தினமும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். இது தொடரும். முதல்வர் உத்தரவிற்கு இணங்க தமிழகத்தில் ஒருவர் கூட பசியோடு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல் ஆளாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பொதுமக்கள் தயாராக இருக்கின்றனர் . ஆனால் மத்திய அரசு தடுப்பூசியை வழங்க பாரபட்சம் காட்டுகிறது. பாஜகவினர் குறை கூறுவதிலேயே மும்முரம் காட்டி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த போரில் நாம் முழுமையாக வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News