முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.
சண்முகத்திற்கு, தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.