அசத்தும் சென்னை மாநகராட்சி பள்ளிகள், 93,445 பேர் சேர்க்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் கடந்த மாதம் 14ஆம் தேதி சேர்க்கை தொடங்கிய நிலையில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளில் இருந்து 12,471 பேர் அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர்.
இப்பள்ளிகளில் மேலும் இரண்டு மாதங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.