தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? இன்று முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் +2 தேர்வு ரத்தாகிறதா என்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.
கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் 1ம் வகுப்புமுதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்தநிலையில்,சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்ச்ர அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்தாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்குமா? என்பது தெரியவரும்.