கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து: உடல் கருகி இளைஞர் உயிரிழப்பு
திருவொற்றியூரில், கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி இளைஞர் உயிரிழந்தார்.;
திருவொற்றியூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (22). தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இரவு வேலையை முடித்துவிட்டு, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், கொசுவர்த்தி சுருள் ஏற்றிக் கொண்டு, தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
கொசுவர்த்தி சுருளினால் ஏற்பட்ட தீ, அவர் போர்த்தியிருந்த புடவையில் பரவை, பற்றி எரிந்து ஜெகதீஸ் உடல் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அறையினுள் இருந்து கூச்சலிடவே, அவரது பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் பொழுது, தீயில் கருகி இருந்த ஜெகதீசன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெகதீசன் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.