விதிமுறை மீறல்: நடு சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்த அதிகாரி -கடைக்கு வைத்தார் சீல்

Update: 2022-04-09 03:30 GMT

திருவொற்றியூர் மண்டலம், வார்டு 1 ல், தாழங்குப்பம் பிரதான சாலையில், மோகன் என்பவருக்கு சொந்தமான, 1,200 ச.அ., இரு கடைகள் அடங்கிய கட்டடம், திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தது. செயற்பொறியாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார், உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கு சென்று கேட்டபோது சரியான பதில் அளிக்காததால், கடை கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்தனர். ஆனால் கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சீல் வைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுமதி பெறாமல் கட்டடத்திற்கு, கண்டிப்பாக சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி, செயற்பொறியாளர் பால்தங்கதுரை, நடு சாலையிலேயே நாற்காலியில் அமர்ந்து விட்டார். 

சமாதானத்திற்கு பின் அனுமதி பெறாத 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, 1,200 ச.அடி., கட்டடத்திற்கு, அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். அதிகாரிகள் சீல் வைக்காததால் மாநகராட்சி அதிகாரி நடு சாலையிலேயே நாற்காலி போட்டு அமர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News