நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு இனிப்பு

சென்னை திருவொற்றியூர் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு திமுக சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.;

Update: 2022-05-21 04:00 GMT

திருவொற்றியூரில் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. திருவொற்றியூர் பகுதியில் தி.மு.க. இளைஞர் அணி சார்பாக திருவொற்றியூரில் உள்ள ஓடியன்மணி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த நபர்களுக்கு இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்

மேலும் இத்திரைப்படம் சமூகநீதியை எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருப்பதாகவும் இத்திரைப்படம் வெற்றி விழா காணும் அளவிற்கு வெற்றி நடை போட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தொண்டர்கள் பலரும் தெரிவித்தனர்

இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆணைக்கிணங்க கிழக்குப் பகுதி இளைஞரணி அமைப்பின் சார்பாக டிபிஆர். மணிவண்ணன் ஏற்பாட்டில் முருகேசன், முத்தையா, கார்த்திகேயன், சந்தானம், கார்த்திகேயன், சுதாகர், பாலஉமாபதி, மூர்த்தி, ஆனந்தன், முத்துராஜ், விஜயராகவன், சரவணன், மனோஜ், கணேசன், கருணாநிதி, முனுசாமி, பரணிகுமார், கணேசன், நடராஜ், ஆகியோர் இதில் கலந்துகொண்டு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News