திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து

Update: 2022-03-29 06:45 GMT

திருவொற்றியூர் எண்ணெய் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருவெற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் எண்ணெய் நிறுவனமான எஸ்.வி.எஸ் ஆயில் மில்லில் திடீரென அதிகாலையில் தீப்பற்றி எரியத்தொடங்கியது இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் அங்கு

திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்

எண்ணெய் நிறுவனத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எண்ணெய் பேக்கிங் செய்து அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டர் ஆயில் டின்னில் மீது போடப்பட்டிருந்த அட்டை தீப்பற்றி எரிந்ததால் தீ மளமளவென எரிய தொடங்கியது

மேலும் எண்ணெய் நிறுவனம் என்பதால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படை வீரர்கள் மூன்று நிலையங்களில் இருந்து வந்து போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் கரும் புகை மண்டலமாக மாறியது.

Tags:    

Similar News