உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்ட சீமான் - திருவொற்றியூறில் பரபரப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும், அவரது கட்சியினர் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தான் போட்டியிடும் திருவொற்றியூர் பகுதியில் நேற்று இரவு சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, எளிய மக்கள் உங்களின் பிள்ளைகளான எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வாய் தவறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு சீமான் தனது தவறை திருத்திக் கொண்டு எங்கள் சின்னமான விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.