ஊர்க்காவல் படைவீரர் சாவில் சந்தேகம்: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை காசிமேட்டில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

Update: 2022-05-10 04:45 GMT

பைல் படம்

திருவெற்றியூர் அடுத்த காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியில் வசித்த மதன் வயது 27 என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலதா வயது 25 என்பவரை ஐந்து மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார் மதன் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய வந்த நிலையில் பாடி பில்டராக இருந்தவர் ஒருமுறை ஆணழகன் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார்

அதே பகுதியில் தனியாக கணவன் மனைவி இருவரும் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் மதன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் தற்கொலை முயற்சி செய்த உடன் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை இராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்மருத்துவமனையில் 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்த்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதனைத் தொடர்ந்து உடலை வாங்குவதற்கு ஹேமலதா உறவினர்கள் மற்றும் மதனின் உறவினர்கள் என இரு தரப்பினர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மகனின் உறவினர்கள் மதன் இறந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மதனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் காசிமேடு காவல்நிலையத்தை முற்றுகயிட்டனர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.




Tags:    

Similar News