திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர் கைது
சென்னை திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவொற்றியூர் சடயங்குப்பம் பகுதியைச் சார்ந்த இசக்கி முத்து என்பவர் அரசுத்தரப்பில் கட்டித்தரப்படும் வீடுகளில் தனியாக வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பலரிடமும் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் ஒவ்வொரு நபரிடமும் வீடுகள் வாங்கி தருவதாக கூறி வீடு ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வரை பணம் தரவேண்டும் என்று கூறி அதற்காக ஒவ்வொரு நபர்களிடமும் தனித்தனியாக முன்பணமாக ஒன்றரை லட்சம் முதல் 7 லட்சம் வரை வாங்கியுள்ளதாக பலரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெறுவதற்கான குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு பத்திர பதிவு செய்து தருவதாக தாசில்தார் கையெழுத்திட்ட ஆணை ஒன்றை மோசடியாக தயாரித்து பொதுமக்களிடம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்
அரசு தரப்பில் காசு கொடுத்தற்கு வட்டாட்சியர் தலைமையில் ஆணை கொடுப்பதாக நினைத்து பலரும் இதே போன்று பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர். இதுவரையில் திருவொற்றியூரில் 34 பேர் புகார் அளித்துள்ளனர் மேலும் இது தொடர்பாக பலரும் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த வண்ணமாகவே உள்ளனர்
ஒட்டுமொத்தமாக இதுவரையிலும் 2.கோடியே 80 லட்ச ரூபாய் வரை பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. முதலில் வினோத் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை மொத்தமாக 34.பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 53,) முருகன் (வயது 32, )சதீஸ் (வயது 45,) கலியபெருமாள் (வயது 65,) உட்பட 4 பேரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இச்சம்பவம் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.