முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா: குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி திரு உருவ படத்தை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைக்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.;
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு;
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2 திறக்கப்படும். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 2 மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.
படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் தலைமை தாங்குகிறார்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது எனவும் கூறினார்.