காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.;
திருவொற்றியூர் அடுத்த காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் பழைய படகுகளின் உதிரிபாகங்கள் குப்பைகள் போன்று கொட்டி வைத்திருந்தனர். அந்த இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து ராயபுரம் தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.