பழுதடைந்த பள்ளியை சீரமைத்து தந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நல சங்கம்

திருவொற்றியூரில் பழுதடைந்த பள்ளியை கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நல சங்கத்தினர் சீரமைத்து தந்தனர்.;

Update: 2022-04-19 02:44 GMT

சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தின் கல்வெட்டு திறக்கப்பட்டது.

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெரியார் நகரில் அமைந்திருக்கும் அரசு உதவி பெறும் மெட்ராஸ் தமிழ் மிஷன் ஆரம்பப்பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டிடங்களை தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் பப்ளிக் பவுண்டேசன் சார்பாக மறுசீரமைப்பு செய்து கொடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கடந்த 1905 ம் ஆண்டு முதல் தனியார் அமைப்பின் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்து வரும் நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் மேற்கூரைகள் ஹாஸ்பிடாஸால் போடப்பட்டு இருப்பதாகவும் அதனை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் நேற்று தனியார் நிறுவனம்நிறுவனத் தலைவர் அகிலன் TOCA பவுண்டேசன் மூலமாக பள்ளிக்கூடத்திற்கு தேவையான 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூட கட்டிடங்களை சீரமைத்துக் கொடுத்து திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு முன்னிலையில் திறந்து வைத்தார். மேலும் வழக்கறிஞர் வி. டி. எஸ். இன்பநாதன், தாளாளர் எம் .டி. எம்.பள்ளி  கஸ்தூரி தலைமை ஆசிரியர் மற்றும் பல கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களும் இதில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News