கோஷ்டிபிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக, கே. பாலகிருஷ்ணன்
கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக உள்ளது என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிஷ்ணன் தெரிவித்தார்.;
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.. இதில் கடந்த 23 முதல் 25 வரை ஆகிய தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்* செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:
பாஜக அரசு நாள்தோறும் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அடுத்தடுத்து மோசமான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.
ஒளிப்பதிவு மசோதா, கடல் ஒழுங்காற்று மசோதா, 3 வேளாண் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது. ஸ்டான் சுவாமி மரணம் இயற்கையான மரணம் இல்லை அது ஒரு நிறுவனப் படுகொலை
கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுக சென்றுள்ளது. அதிமுக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 2 மாதத்தில் திமுக அனைத்து திட்டங்களுக்கும் நிறைவேற்ற முடியாது.
10 ஆண்டுகளில் எவ்வளவோ கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் அக்கட்சி அதனை செய்யவில்லை. திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை
கெயில் எரிவாயு திட்டத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சனை வரும் போது திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், வலியுறுத்துவோம் இதில் எந்த சமரசம் இல்லை.
கூட்டணி கட்சிகள் எல்லா பிரச்சனைகளையும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள் இல்லை, பாஜகவை, அதிமுகவை எதிர்க்கும் கொள்கையின் படி ஒன்றிணைந்து செயல்பட்டது. அந்த வகையில் அரசியல் கனவை மார்சிஸ்ட் கட்சி நிறைவேற்றி உள்ளது.
கியூபா மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அரசை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து 29 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.