திருவேற்காடுஅம்மன்கோயிலில் பௌர்ணமி நிறைமணி சிறப்பு பூஜை

புரட்டாசி பௌர்ணமியையொட்டி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நிறைமணி பூஜை விழா

Update: 2021-09-22 10:32 GMT

சென்னை  திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி பழங்கள்  காய்கறிகளுடன் நிறைமணி விழா பூஜைகள் துவங்கின. சென்னையில் கோயில் நகரமான திருவேற்காடில் புகழ் பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில், புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு  நிறைமணி விழா பூஜைகள் நடைபெறுகிறது.

அதில், கோயிலின் கருவறை மற்றும் முன் பகுதியில் சுமார்  5 டன் அளவுக்கு காய்கறி, தானியம், பழம், மூலிகை தாவரங்கள், எண்ணெய், இனிப்பு, குளிர்பானம் போன்ற  பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பசியின்றி வாழ வேண்டும். மழை, விவசாயம், இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிறைமணி பூஜை ஆண்டு தோறும், புரட்டாசி பவுர்ணமியில் நடத்தப்படுகிறது.மூன்றாவது நாள், அங்குள்ள காய்கனி உள்ளிட்ட பொருட்களால் உணவு சமைத்து, அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பழம் மற்றும் இனிப்புகள் பிரசாதமாகவும் வழங்கப்படும். சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளைச்  சேர்ந்த பக்தர்கள் நிறைமணி விழா பூஜையில் கலந்து கொள்ள, கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

Tags:    

Similar News