தமிழகத்தில் டாஸ்மாக் வசூல் ரூ.164 கோடி...? என்னம்மா இப்படி பண்றீங்களேமா...
தமிழகத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகயில் ஒரே நாளில் 164 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழகத்தில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் திறக்கப்பட்டது. இதில் நேற்று முதல் நாள் மட்டும் மொத்தமாக 164 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனையாகும். 35 நாளுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் மதுக்களை வாங்கி சென்றனர்.
கோவை மண்டலத்தை தவிர்த்து சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 49.54 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடி என ரூ.164.87 கோடிக்கும் நேற்று மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.