சென்னை உட்பட ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்: வானிலை

Update: 2021-05-16 08:48 GMT

வட கடலோர மாவட்டங்களில் சென்னை உட்பட ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு மலைத் தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி கோயம்புத்தூர் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க தடையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News