புதியதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு வரையறை கூட்டம்

புதியதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு வரையறை கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.

Update: 2021-12-24 08:09 GMT

புதியதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டு வரையறை கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வார்டு மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு மறுவரை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் தாம்பரம் அம்பேத்கர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மறுவரை ஆணையத்தின் தலைவர் பரணி குமார், செயலாளர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத், மா.ஆர்த்தி, பாஸ்கர பாண்டியன், ஆல்பின் ஜான் வர்கீஸ் மற்றும் காவல்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்த மனுக்களை வழங்கினர்.

குறிப்பாக அதிமுக பாஜக உட்பட எதிர்க் கட்சிகள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கூறும்போது, மறு வரையறை செய்யப்பட்டதில் அதிமுக எங்கெங்கெல்லாம் தொடர்ந்து வெற்றி பெற்று தக்க வைத்துள்ள வார்டுகள் சிதைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோல் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் வேத சுப்பிரமணியம், தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் பெருங்குளத்தூர் பகுதி வார்டுகள் செம்பாக்கம் வார்டுகள் என அனைத்தும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் போதிய விளம்பரங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி குறுகிய காலத்தில் நடப்பதால் மீண்டும் வார்டு வரையறையை மறுசீரமைப்பு செய்து நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுபோல் திமுக சார்பில் 90% வரை வார்டு மறுவரையறை சரியாக உள்ளதாகவும் சில பகுதிகளில் சில தெருக்கள் சில பகுதிகள் விடுபட்டு உள்ளதாகவும், அதையும் சேர்க்க சொல்லி தாங்களும் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளதாக திமுகவினரும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News