புளியந்தோப்பில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்: 4 பேர் கைது
சென்னை புளியந்தோப்பில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை புளியந்தோப்பு நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பயஸ் பாஷா 24. இவர் மெடிக்கல் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு கே.பி.பார்க் புதிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி கே.பி.பார்க் புதிய குடியிருப்பு வளாகம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் 5 இளைஞர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நண்பர்கள் சரமாரியாக பயஸ் பாட்ஷாவை தாக்கினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுத்து விட்டு பயஸ் பாஷா வை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பயஸ் பாஷா சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த தவககலை என்கின்ற சந்தோஷ் 21, பிரகாஷ் என்கின்ற ஸ்டீபன் 21, வெள்ள விக்கி என்கின்ற விக்னேஷ் 23, நரசிம்மன் 22 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மனோஜ் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பேசன் பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.