பப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்
யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.;
பப்ஜீ மதன் மற்றும ்அவரது மனவைி (பைல் படம்)
சென்னை : யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இணைதளத்தில் பெண்கள் தொடர்பாக ஆபாசமாக பேசிய கணவர் மதனுக்கு உடந்தையாக இருந்ததால் மதன் மனைவி கிருத்திகா கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு, ஜூன் 30ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
8 மாத கைக்குழந்தையுடன் நீதிமன்றக் காவலில் இருந்த கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.