பாஜக கொண்டுவந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும்: கே எஸ் அழகிரி

சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும்

Update: 2021-09-20 18:15 GMT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி(பைல்படம்)

மத்திய பாரதிய ஜனதா கட்சியின் தவறான கொள்கைகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் தூக்கி வீசப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் செப்20 முதல் 30ந் தேதி வரை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்துள்ளன.இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம். பெகாசுஸ் உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   கே.எஸ். அழகிரி பங்கேற்று, கருப்பு கொடி ஏற்றி வைத்து மேலும் பேசியதாவது:

புதிய வேளாண் திருத்த சட்டம் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை மனதார பாரட்டுகின்றேன் இதுதான் மக்கள் அரசு. இன்றைய போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல. இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம். முன்னாள் பிரதமர் நேரு, இந்தியா முழுவதும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி பலலட்சம் கோடி  வருமானம் ஈட்டினார். இந்தியாவில் ஜனநாயகத்தையும் சோசலித்தையும் கொண்டு வந்தவர் ஜவஹர்லால் நேரு. ஏகாதியபத்தியத்திற்கு எதிரான கருவியாக காங்கிரஸ் கட்சி இருந்தது. தற்போது பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றார் மோடி.

நாட்டிற்கு வருமானம் வராத நிறுவனங்களை தான் காங்கிரஸ் கட்சி விற்பனை செய்தது. ஆனால் வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை. காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றது பாஜக அரசு. விரைவில் மக்கள் விரோத பாஜக அரசு கொண்டுவந்த தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும் என்றார் கே.எஸ். அழகிரி

Tags:    

Similar News