சென்னை விமானநிலையத்தில் 3 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த 3 ஆண்டு தலைமறைவு குற்றவாளி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.;
ராமநாதபுரத்தில் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவா் 3 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டு,நேற்றிரவு சாா்ஜாவிலிருந்து திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலிவனம் பகுதியை சோ்ந்தவா் ராஜா (24).இவா் ராமநாதபுரம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்.இதையடுத்து போலீசாா் ராஜாவை கைது செய்ய போலீசார் தேடினா். ஆனால் ராஜா கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டாா்.
இதையடுத்து ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தாா்.அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்திருந்தாா்.
இந்நிலையில் தலைமறைவான திருட்டு வழக்கு குற்றவாளி ராஜா,சாா்ஜா நாட்டில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்துவந்துள்ளாா்.3 ஆண்டுகளாகிவிட்டதால்,சொந்த ஊா் திரும்புவதற்காக நேற்றிரவு சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ராஜா வந்தாா்.சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையில் ராஜா ராமநாதபுரம் போலீசால் திருட்டு வழக்கில் தேடப்படும் 3 ஆண்டு தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.
இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள் ராஜாவை வெளியில் விடாமல்,பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனா்.அதோடு ராமநாதபுரம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனா்.அதன்பேரில் ராமநாதபுரம் தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனா்.