பணமோசடி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி விமானநிலையத்தில் பிடிபட்டார்..!

கன்னியாகுமரியை சோ்ந்த பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி, கத்தாா் நாட்டிலிருந்து திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-22 04:13 GMT

கன்னியாகுமரியை சோ்ந்தவா் சுபாஷ் லாசா்(38).இவா் மீது கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பணமோசடி உட்பட சில வழக்குகள் உள்ளன. இதையடுத்து போலீசாா் இவரை கைது செய்ய தேடினா்.ஆனால் சுபாஷ் லாசா் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாா் இவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா். அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்திருந்தனா்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து கத்தாா் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா். அந்த விமானத்தில்,வெளிநாட்டில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த சுபாஷ் லாசரும் வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை குடியுறிமை அதிகாரிகள் கம்யூட்டரில் பரிசோதித்த போது, அவா் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள் சுபாஷ் லாசரை வெளியில் விடாமல்,குடியுறிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனா்.அதோடு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனா்.சுபாஷ் லாசரை கைது செய்து அழைத்து செல்ல போலீசாா் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருக்கின்றனா்.

Tags:    

Similar News