தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இம்பா அமைப்பினர்
வ.உ.சிதம்பரனார் 150 ஆவது ஆண்டு நிகழ்ச்சியில், தமிழக முதல்வருக்கு இம்பா அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.;
இம்பா அமைப்பின் பொருளாளர் அப்புசந்திரசேகர் தலைமையில், வ.உ.சிதம்பரனார் 150 ஆவது ஆண்டு நிகழ்வில் மரியாதை செலுத்தினர்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், KPK செல்வராஜ், ACசண்முகம், KVதங்கபாலு, கிருஷ்ணன் பிள்ளை, இளவரசன் UAE, திரைப்பட நடிகர் ஆனந்தராஜ், திரைப்பட இயக்குநர் ராஜசேகர், பெண்டகன் தர மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் சரவணன் தியாகராஜன், மற்றும் IMPA அமைப்பைச் சேர்ந்த ஆளுமைகள் உட்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக தலைநகர் துறைமுக பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, பொது மக்கள் பெருங் கூட்டமாக திரண்டு வந்து மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்திய, IMPA நிறுவனர் R. அருணாச்சலம் முதலியார், பொதுச் செயலாளர் RSK ரகுராம், பொருளாளர் அப்பு சந்திரசேகர், மாநில அமைப்பு செயலாளர் ரவி பிள்ளை, மற்றும் இம்பா நிர்வாகிகள் அனைவருக்கும் விழா கமிட்டி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், வ.உ.சிதம்பரனார் 150 ஆவது ஆண்டு நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இம்பா அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. (IMPA – அகில உலக முதலியார்-பிள்ளைமார் சங்கம்)