குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி...டாஸ்மாக் நேரம் மாற்றம்
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது.;
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை வழக்கமான நேரத்துக்கு திறக்கப்படுமா? அல்லது மூடப்படுமா என்ற கேள்வி குடிமகன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் மறுபடியும் நேரம் மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது குறிப்படத்தக்கது.