'குடிமகன்'களால் சாதனை தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.258 கோடி வசூல்
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் ஒரே நாளில் ரூ.258 கோடி வசூல் செய்துள்ளது.;
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 258 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலியால், சனிக்கிழமை நேற்றைய தினமே குடிகாரன்கள் மதுபானங்களை வாங்கி சேமித்து வைத்துக்கொண்டதால், ஒரேநாளில் ரூ.258 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.48.35 கோடிக்கும் மதுபானம் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.