மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
தமிழகத்தில் மின்வெட்டு இ்ல்லாத மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.;
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார பகிர்மான தலைமை அலுவலகத்தில் 9 மண்டல மின் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தொடங்கும் பருவமழையின் போது சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தடுக்கும் விதமாக 9 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஊரடங்கு மற்றும் கோடை காலத்தில் மின் தடை இல்லாமல் சேவை வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.