தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன் அடிப்படையில் தபால் வாக்குப்பதிவு இன்று சென்னையில் தொடங்கியது.

Update: 2021-03-26 06:15 GMT

சென்னையில் தபால் ஓட்டுப் போடுவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களில் 7 ஆயிரத்து 300 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை 7 நாட்கள், 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்குச் சென்று தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த குழுக்களில் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் இடம் பெற்றுள்ளனர். சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

சென்னையில் 7,300 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.நேற்று தொடங்குவதாக இருந்த நிலையில் இன்று முதல் தபால் வாக்கு என மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நேற்று அறிவித்திருந்தார்.

Tags:    

Similar News