ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Update: 2021-04-23 07:15 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளங்கோவன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News