ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படலாம்
ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. தினசரி பாதிப்பும் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறக்க உத்தரவிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. இதேபோல், கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைகளில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.