வாகனசோதனையில் ரூ.319 கோடி பறிமுதல் சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.;
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் சத்யபிரதா சாகு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 88,947 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இணைக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் 1,20,807 விவிபேட் கருவிகள் இணைக்கப்பட உள்ளது. ஏதேனும் வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89,185 பேர் தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்பள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.