விநாயகரை இந்தி கடவுளாக சித்தரிக்கிறார்கள்: பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம்
முருகனை தமிழ் கடவுள் எனவும் விநாயகரை இந்தி கடவுள் எனவும் கூறுகிறார்கள்;
சென்னையிலுள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்குகிறார், அக்கட்சியின் கலாசார பிரிவு தலைவர் காயத்ரிரகுராம்.
விநாயகரை இந்தி கடவுளாக சித்தரிக்கிறார்கள் என்றார் பாஜக கலாசாரபிரிவு தலைவர் காயத்ரி ரகுராம்.
சென்னை தி.நகர் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தமிழக பாஜக கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்று பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:அனைவருக்கும் இனிய சங்கத்தமிழ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துளை தெரிவித்து கொள்கிறேன். முருகனை தமிழ் கடவுள் எனவும் ,விநாயகரை இந்தி கடவுள் என்னவும் கூறுகிறார்கள். ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் எப்படி வெவ்வேறு கடவுள்கள் ஆவார்கள். கடவுள் என்றால் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கடவுள்தான் என்றார்.