சென்னையில் அரசுடன் போக்குவரத்து தொழில் சங்கத்தினர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் மற்றும் நிதி அமைச்சரிடம் பேச்சு நடத்தி கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் நடைபெற்ற 14 வது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு, 65 தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருந்து 21 கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், அது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து அடுத்த கூட்டத்தில் முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி வளாகத்தில்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாட்டாளி தொழிற்சங்க பேரவை, தொ.மு.சா, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 65 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தமிழக அரசு நிதித்துறை இணை செயலாளர் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிர்சாகிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்ட நிலையில் சுமார் நான்கு மனி நேர பேச்சுவார்த்தை க்கு பின் தேதி அறிவிக்கபடாமல் கூட்டம் ஒத்திவைக்கபட்டது.
பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 14 வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவாத்தை நடைபெற்றதில் 65 சங்கங்களின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு 21 கோரிக்கைகளையும், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைதுள்ளனர். நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். அதன் பின்னர் அடுத்த கூட்டம் நடத்தி அதில் எந்தெந்த கோரிக்கைகள் நிரைவேற்றபடும் என அறிவிக்கப்படும். இன்னும் சில மாதங்களில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கபட்டு பல புதிய பேருந்துகளும் வாங்க திட்டமிடபட்டு உள்ளதாகவும், 46457 கோடி நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் மீதான அக்கறையில் தமிழக அரசு போக்குவரத்து துறையை செயல்படுத்தி வருவதாகவும், தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கமலக்கண்ணன் கூறுகையில்: பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டா காசுகள் வழங்கப்படுவதில்லை,மேலும் தற்போது பேருந்துகளிலும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துவதற்கு பாதுகாப்பு என்பதே இல்லை தமிழக அரசு அரசுப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் இல்லையென்றால் இடைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும். இதனை அமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
தொமுச தொழிற்சங்கம் பொதுசெயலாளர் நடராஜன் பேசும்போது: கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து வழிதடளங்களை தனியாருக்கு விட்டு கொடுக்கபட்டது.இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் செல்லும் அனைத்து இடங்களிலும் அரசு பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விதிக்க்பட்ட தண்டனை ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது.ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. இந்த பேச்சுவார்த்தைதான் இறுதியாக இருக்கும் என்றார்