கமலாலயத்தில் திருப்பூர் குமரனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

பிஜேபி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திருப்பூர் குமரனின் படத்திற்கு வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-10-04 12:49 GMT

வானதி சீனிவாசன் ( பைல் படம்)

விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான புதிய அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். பல விடுதலைப் போராட்ட தியாகிகளை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் விதமாக அந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும்.

திமுக அரசு குறைந்த நாட்களில் பல சாதனையை செய்து விட்டதாக கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை அபாயகர அளவுக்கு செல்ல உள்ளதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது.

நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் நிர்வாக , நிதித்துறை சீர்த்திருத்தை கொண்டுவர தமிழக அரசு முன்வர வேண்டும்.

அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால்தான் சாதனை . அறிவிப்புகளை வெளியிடுவதில் எந்த சாதனையும் இல்லை.

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றுவதில் பக்தர்களின் உணர்வை பாதிக்காத வகையில் இந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.

கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளதாக கேட்கின்றீர்கள் , ஒரு அரசியல் தலைவரை , அவரது அரசியல் செயல்பாட்டுப்படிதான் விமர்சிக்க முடியும் என்பதே எனது கருத்து.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் , ஆனால் உத்தரபிரதேசம் மீது மட்டும் ராகுல்காந்திக்கு தைரியம் வருகிறது.

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும்,மாபியாக்கள் மீதான நடவடிக்கை குறித்தும்புள்ளி விவரத்துடன் எங்களால் கூற முடியும்.

கோயில் நிலங்கள் மீட்பதில் முழுமையடைந்து விட்டதாக சேகர்பாபுவால் கூட முடியுமா..? கோயில் நில மீட்பில் சேகர்பாபு கூடுதல் கவனம் செலுத்தட்டும். காணிக்கை தங்கத்தை கட்டிகளாக மாற்றும் நடவடிக்கை முறையாக நடைபெறுமா என தெரியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News