தமிழ் மீது தீவிர பற்றுக் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார் : வைகோ புகழாரம்

தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும், குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீதும் அடங்கா பற்றுக் கொண்டவர் ராமச்சந்திரா ஆதித்தனார் என்று வைகோ கூறினார்.

Update: 2021-08-12 04:00 GMT

ராமச்சந்திரா ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் வைகோ பேட்டி அளிக்கிறார்.

மாலைமுரசு நாளிதழ் நிறுவனர்.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 87 வந்து பிறந்த நாளை முன்னிட்டு மாலைமுரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் .கூறியதாவது

தமிழினத்திற்கு அழியாப் புகழை ஏற்படுத்திக் கொடுத்த தன்னலம் கருதாத பத்திரிக்கை துறையில் ஒரு புரட்சியை உருவாக்கிய பாமர மக்களும் செய்திகளை தெரிந்து கொள்ளக்கூடிய பத்திரிக்கை நடத்தியவர் தமிழர் தந்தை ராமச்சந்திர ஆதித்தனார் என மதிமுக பொதுச்செயலாளர் புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய அவர்தான் தன்னுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தவர் என்றும் அவர் தன் தந்தையைப் போலவே தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் குறிப்பாக ஈழத் தமிழினத்தின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார் என்று கூறினார்.

ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் எதற்கும் அஞ்சாதவர் என்றும் அடக்குமுறைகளைக் பற்றி கவலைப்படாதவர் என்றும் ஈழத்தமிழர்களுக்காக அவர் செய்தி வெளியிட்ட பொழுது எவ்வளவு அச்சுறுத்தல்கள் வந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் அவர் பழகுவதற்கு இனியவர் என்று தன் மீது அவர் அளவற்ற பாசம் கொண்டவர் எனவும் மெர்க்கன்டைல் வங்கி மீட்பதற்காக தான் வாஜ்பாயிடம் பேசியதற்காக தான் போட்டியிட்ட சிவகாசி பகுதியில் ஊர் ஊராக தனக்காக பிரச்சாரம் செய்தவர் ராமச்சந்திர ஆதித்தனார் எனவும் அவர் கூறினார்.

அவருடைய பணியால் சேவையால் அவர் தமிழ் மீது கொண்ட பற்றால் அதைத் தொடர்ந்து அவருடைய மகன் செய்து வருகிறார் எனவும் மாலை முரசு ஏடு அதை செய்து வருகிறது எனவும் கதிரவன் வந்தது போல மீண்டும் கதிரவன் உதிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை  அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News