அடடே...பிரபல நகைக்கடை ரூ. 1 கோடி கொரோனா நிதி..!
சென்னையில், பிரபல நகைக் கடை ரூ. 1கோடி கொரோனா நிதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் அமைப்புக்கு பிரபல நகைக்கடை நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிரண்குமார், வங்கி பணப்பரிவர்த்தனை மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
மேலும் கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கு தான் துணை நிற்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.