துக்க வீட்டில் நடந்த துயரம் : வீட்டுப்பத்திரம் உட்பட 80 சவரன் நகை திருட்டு
கோடம்பாக்கத்தில் துக்கம் நடந்த வீட்டில் 80 சவரன் நகை, வீட்டுப்பத்திரம் திருட்டு போனது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
சென்னை கோடம்பாக்கத்தில் சீனிவாசன் என்பவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் சீனிவாசனின் மூத்த அண்ணன் மற்றும் அவரது மனைவி கொரோன தொற்றினால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் வீட்டில் அவர் வைத்திருந்த 80 சவரன் நகைகள் மற்றும் வீட்டு பத்திரம் திருடப்பட்டுள்ளது.
துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் தான் நகை, பத்திரத்தை திருடிச் சென்றுள்ளதாக சீனிவாசன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.