வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, சமூக சமத்துவத்தற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-01-22 00:30 GMT

 ரவீந்தரநாத்

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அச்சங்கத்தின் பொதுசெயலாளர் ரவீந்தரநாத் பேசியதாவது:

கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள் மற்ற 7 மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதால் அரசிற்கு விருதுகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், மருத்துவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றும் இதுவரை, கோரிக்கையோ,  ஊதியம் உயர்வோ வழங்கபடவில்லை.

எனவே, எதிர்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை,  தற்போதைய அரசு நிறைவேற்ற வேண்டும். மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில்,  பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் அதே பயிற்சி ஊதியத்த, ராஜா முத்தையா கால்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கும் வழங்க பட வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர் அவர்களை மிரட்டும் போக்கை கைவிட்டு கோரிக்கை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கலை, முதுகலை மருத்துவ கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. முதல்முறையாக மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுவதால் மாணவர்கள் மத்தியில் அச்சம் உள்ளது. கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News