'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்'- ரமேஷ் சென்னிதலா
‘நகர்ப்புற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்’- என்று ரமேஷ் சென்னிதலா கூறினார்.
காங்கிரஸ் கட்சி செயலாளர் ரமேஷ் சென்னிதலா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மேற்பார்வையாளராக வந்து உள்ளேன். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சிகளில் போட்டியிட உள்ளவர்களின் விவரங்களை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் சேகரித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய என்னை சோனியா காந்தி அனுப்பி உள்ளார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.