பணியாளர்கள் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று : குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல்

சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 22 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2022-01-07 17:00 GMT

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடல் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்சில் பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டதால், அங்கு பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 22 ஊழியர்களுக்குவ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள்  தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், ஒமைக்ரான் தொற்று ஆய்வு செய்ததில் 20 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் சில ஊழியர்களின் முடிவு இன்னும் வரவில்லை. எனவே தொற்றின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சரவணா ஸ்டோர் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் படி சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி மாணவர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News