ஏடிஎம் நூதன கொள்ளை: குற்றவாளிக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்

ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நஜீம் உசேனை ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-06-30 07:21 GMT

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட நபரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.

சென்னை: ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நஜீம் உசேனை ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது நபர் நஜீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் நீதிபதி முன் நஜீம் உசேன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நஜீம் உசேனை ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சகானா உத்தரவிட்டார்.

சென்னையில் மட்டும் 15 ஏ.டி.எம். மையங்களில் ரூ.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News